அன்வர்ராஜா முதல் அருண்மொழித்தேவன் வரை 30 பேருக்கு கல்தா கட்சி மாற தூதுவிடும் அதிமுக சிட்டிங் எம்பிக்கள்

தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. இதில் 37 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்பிக்களாகினர். அதன்மூலம் நாடாளுமன்றத்தில் நாட்டின் 3வது மிகப்பெரிய கட்சியாக அதிமுக திகழ்ந்தது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலில் அதிமுக மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களை கூட்டணி கட்சிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில் தற்போது சிட்டிங் எம்பிக்களாக உள்ள 36 எம்பிக்களில் 6 பேருக்கு மட்டுமே மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது ஜெயவர்தன் (தென்சென்னை), மரகதம் குமாரவேல் (காஞ்சிபுரம்), வேணுகோபால் (திருவள்ளூர்), தம்பிதுரை (கரூர்), மகேந்திரன் (பொள்ளாச்சி), ஏழுமலை (ஆரணி) ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ்பாபு (வடசென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் ((தென்சென்னை), கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்), அரி (அரக்கோணம்), பி.செங்குட்டுவன் (வேலூர்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), வனரோஜா (திருவண்ணாமலை), ஏழுமலை (ஆரணி), கே.காமராஜ் (கள்ளக்குறிச்சி), பன்னீர்செல்வம் (சேலம்), பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்), எஸ்.செல்வகுமார் சின்னையன் (ஈரோடு), வி.சத்தியபாமா (திருப்பூர்), சி.கோபாலகிருஷ்ணன் (நீலகிரி), பி.நாகராஜன் (கோவை), சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), எம்.உதயகுமார் (திண்டுக்கல்), பி.குமார் (திருச்சி), ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), ஏ.அருண்மோழிதேவன் (கடலூர்), எம்.சந்திரகாசி (சிதம்பரம்), ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), கே.கோபால் (நாகப்பட்டினம்), கு.பரசராமன் (தஞ்சாவூர்), பி.அர்.செந்தில்நாதன் (சிவகங்கை), ஆர்.கோபாலகிருஷ்ணன் (மதுரை), ஆர்.பார்திபன் (தேனி), டி.ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), ஏ.அன்வர்ராஜா (ராமநாதபுரம்), ஜெயசிங் தியாகராஜ் (தூத்துக்குடி), எம்.வசந்தி (தென்காசி), கே.ஆர்.பி.பிரபாகரன் (திருநெல்வேலி) ஆகிய 30 அதிமுக சிட்டிங் எம்பிக்களுக்கு தற்போது சீட் வழங்கப்படவில்லை. சிட்டிங் எம்பிக்கள் 30 பேருக்கு சீட் வழங்கப்படாததால் அவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு அல்லது வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக மதுரை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை மிகவும் நெருக்கடி கொடுத்து தனது மகன் ராஜ்சத்யனுக்கு சீட் வாங்கி விட்டார். இது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போதைய எம்பி ஆர்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. அதேபோன்று நாமக்கல் தொகுதியை தற்போதைய எம்பி பி.ஆர்.சுந்தரம் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அமைச்சர் தங்கமணி தலையீட்டின் பெயரில் காளியப்பனுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதனால் அவரும் அணி மாறுவார் என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியை தற்போதைய எம்பி மரகதத்துக்கு வழங்கக்கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

ஜெயலலிதா இருந்தபோது நெல்லையை சேர்ந்த பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார். ஆனால், தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மிகவும் நெருக்கமாகி பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியனுக்கு சீட் வாங்கி கொடுத்து விட்டார். திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மீது பல்வேறு புகார் உள்ளது.

குறிப்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில்தான் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார். தற்போது, அவருக்கு எடப்பாடி சீட் வழங்கி உள்ளார். அவருக்கு எதிராக புகார் கொடுத்த பெண், இப்போது ஆனந்தனுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியை ராஜகண்ணப்பன் கேட்டார். ஆனால் அவருக்கு கிடைக்காததால் நேற்றே திமுகவில் இணைந்து விட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு தொகுதியில், போட்டி வேட்பாளர்கள் களம்காண உள்ளதால் அதிமுக வேட்பாளர்களும், அதிமுக தலைமையும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தர்மசங்கடத்தில் திண்டாடும் இபிஎஸ்-ஓபிஎஸ்

திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மீது பல்வேறு புகார் உள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில்தான் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார். தற்போது, அவருக்கு எடப்பாடி சீட் வழங்கி உள்ளார். அவருக்கு எதிராக புகார் கொடுத்த பெண், இப்போது ஆனந்தனுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: