அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு பிறகு  ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:  தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.நடராஜன்  போட்டியிடுகிறார். தேர்தலில் தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும்.

அது எந்த சின்னம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் 16 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ேளன். எங்களுடைய தேர்தல் அறிக்கை “வளமான தமிழகம், வலிமையான பாரதம்” என்ற தலைப்பில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.தமாகா தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்த நிலையில், அந்த கட்சிக்கு அடுத்த நிமிடமே சைக்கிள் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: