இந்திய கம்யூ.வேட்பாளர்கள் அறிவிப்பு : நாகை-செல்வராசு திருப்பூர்-சுப்பராயன்

திருவாரூர்:  தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய  2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2  தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சுப்பராயன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகை தொகுதிக்கு முன்னாள் எம்பி செல்வராசு (62) மற்றும் திருப்பூர் தொகுதிக்கு முன்னாள் எம்பி சுப்பராயன் (72) ஆகியோரை தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் செல்வராசு, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லியை சேர்ந்தவர். கட்சியின் தேசிய குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர், 1989-1991, 1996-1998, 1998-2000 ஆகிய 3 முறை எம்.பி.யாக இருந்தார். இவருக்கு கமலவதனம் (55) என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளர்.

மற்றொருவரான கே.சுப்பராயன், திருப்பூரை சேர்ந்தவர். கட்சியில் மத்திய நிர்வாக குழு உறுப்பினராகவும், மாநில துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த 1984, 1988, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும், 2004, 2009 ஆண்டு கோவை தொகுதியின் எம்.பி.யாவும் இருந்தவர். இவருக்கு மணிமேகலை (65) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: