வழக்கை வாபஸ் பெற்றால் 3 தொகுதிகளில் இடைத் ‘தேர்தல்’: திமுகவிடம் ேதர்தல் ஆணையம் உறுதி

புதுடெல்லி: வழக்கை வாபஸ் பெற்றால் மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை ஆணையம் நடத்தும் என்று தன்னிடம் மனு கொடுத்த திமுகவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தக்கோரி திமுக தரப்பில் எம்பி.திருச்சி சிவா மற்றும் டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் நேற்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,”தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த முன்வரவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது.

மேலும் தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக இருக்கும் வேளையில் திருவாரூக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்த மாநில அரசு திட்டமிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் முழுவதுமாக அரசியல் உள்நோக்கம் உள்ளது. அதனால் மேற்கண்ட தொகுதிகளுக்கும் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும். இதைத்தவிர ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் டிஜிபி.ராஜேந்திரன் உட்பட 10 போலீஸ் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையர் திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கை வாபஸ் வாங்கியது போன்று மீதமுள்ள 2 தொகுதியின் வழக்கையும் திரும்பப்பெறும் பட்சத்தில் மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக ஆணையர் எங்களிடம் உறுதியளித்துள்ளார் என்று கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: