தீவிரவாத முகாம்களை பாக். உடனடியாக அழிக்க வேண்டும் :ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் கண்டனம்

ஜெனீவா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்., 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, ஆதில் என்ற தீவிரவாதி 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் வந்த காரை, சிஆர்பிஎப் வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம்

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 40வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொணட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சிந்து மற்றும் கைபர் பேக்தன்ஹ்வா பகுதியைச் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தங்களது மண்ணில் உள்ள தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் அலி காஷ்மீரி, தற்கொலை தாக்குதல் நடத்தும் படி காஷ்மீரிகளை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே வலியுறுத்துவதாக குற்றம் சாட்டினார்.மேலும் தீவிரவாதிகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு சர்வதேச அமைதியையும் கெடுப்பதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: