கொலம்பியாவில் விமான விபத்து 12 பேர் பலி

போகோடா: கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் மேயர்,  அவரது குடும்பத்தினர் உட்பட 12 பேர் பலியாகினர். கொலம்பியா நாட்டில் உள்ள லேசர் என்ற நிறுவனம் சரக்கு மற்றும் பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான டக்ளஸ் டிசி 3 விமானம், சான் ஜோஸ் நகரில் இருந்து  பயணிகளுடன் புறப்பட்டது. வில்லாவிசென்சியோ நோக்கி விமானம்  சென்று கொண்டிருந்தது.

நகரை நெருங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த டாரைரா மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர்,  பொதுமக்கள், விமானி என 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் இவான் டியூக், இரங்கல் தெரிவித்துள்ளார். டக்ளஸ் விமானம் 1930களில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட  விமானமாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: