எம்.பி., சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுகவில் விருப்ப மனுக்கள் குவிந்தன : கனிமொழி, கதிர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மனு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள், 21 சட்மன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நேற்று கனிமொழி, கதிர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் விருப்ப மனுக்கள் அளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைக் கழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை ஏராளமானவர்கள் விருப்ப மனுக்களை தந்துள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயம் தொண்டர்கள், நிர்வாகிகளால் நிரம்பி வழிகிறது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி., தென்சென்னையில் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன், வேலூரில் போட்டியிட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், சேலம் தொகுதிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு,  சிவகங்கை தோகுதிக்கு சேங்கை மாறன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு தேவஜவகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் விருப்ப மனுக்கள் தந்தனர். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிலும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக  வக்கீல் மாரிமுத்து, மனைவி வசந்தா ஆகியோர் விருப்ப மனுக்கள் அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: