அதிமுகவை ஏமாற்றி வாங்கிய பணத்தை வைப்பதற்கு தைலாபுரத்தில் ராமதாஸ் குடோன்கள் கட்டுகிறார்

சென்னை: திமுகவுடன் கூட்டணி பேசுவதாக கூறி, அதிமுகவை ஏமாற்றி வாங்கிய பணத்தை வைப்பதற்காக தைலாபுரத்தில் ராமதாஸ் குடோன்கள் கட்டுகிறார் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அளித்த சிறப்பு பேட்டி:

திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜவும் சேர்ந்த பிறகு, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பானது பன்மடங்கு உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரக்கூடிய தலைவர்களின் நிகழ்ச்சிகளை கே.எஸ்.அழகிரி சொல்வார். இருந்தாலும், நாங்கள் எல்லாம் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் வர வேண்டும் என்று விரும்புகிறோம். அநேகமாக, தேர்தலுக்கு முன்பாக ராகுல்காந்தி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம், பிரமாண்டமாக தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அதை கே.எஸ்.அழகிரி உறுதி செய்து அறிவிப்பார். நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை ஆரம்பத்தில் அவரது பேச்சுதான் புரியாமல் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அவரது நடவடிக்கைகளும் புரியாமல் உள்ளது. எங்கு செல்கிறார். எதை நோக்கி செல்கிறார். அரசியலில் எதை சாதிக்க விரும்புகிறார் என்பது எதுவும் புலப்படவில்லை. அவர் ஒரு சக்தியாக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி நிற்கிறது. அவருக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகவில்லை. அங்கே 100 இங்கே ஆயிரம் என்று சில இடங்களில் பெறலாமே தவிர பெரிய அளவில் வாக்கு வங்கி அவருக்கு எங்கும் உருவாகவில்லை.

தற்போது நடந்த இந்தியா- பாகிஸ்தான் தாக்குதலை பொறுத்தவரை, இந்திய விமான படையை சார்ந்தவர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவே அவர்களை புகழ்கிறது. ஆனால், எப்போதும் போல இதிலேயேயும் அரசியல் லாபம் அடைய பாஜ முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. இந்த வெற்றி என்பது, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமான படை மற்றும் இந்திய ராணுவத்தை மட்டுமே சாருமே தவிர, ஆளுகின்ற அரசுக்கோ, பிரதமராக இருக்கக்கூடிய மோடியையோ போய் சேராது. அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்திருப்பதை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சுவார்த்தை வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  இதை எப்படி பயன்படுத்தி இந்த பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுக்கு சாதகமான காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்போடு செயல்பட வேண்டும்.ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அதிமுக கூட்டணியை மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். இந்த கூட்டணியை மெகா கூட்டணி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மெகா கூட்டணி தேர்தலின் போது மெகா வீழ்ச்சியை அடையும். 40 தொகுதியில் ஒன்றை கூட அவர்களால் பெற முடியாது. ஒருசில இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. பாமகவும், பாஜவும் வந்த பிறகு, அந்த வாய்ப்பும் பறிபோய் விட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியல் நடத்துவது பணத்துக்காகத்தான் என்பது மிக வெளிப்படையாக இப்போது தெரியவந்துள்ளது. அமைச்சர் பதவி வந்தபோது குடும்பத்தாருக்கு பதவி வழங்க மாட்டேன் என்று சொல்லிய ராமதாஸ் தன் மகனை மத்திய அமைச்சராக மகுடம் சூட்டி சந்தோஷப்பட்டார். அது மட்டுமல்லாமல், பல மருத்துவ கல்லூரிகளில் செய்த ஊழல்கள் எல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட பார்த்தீர்கள் என்று சொன்னால், திமுகவோடு கூட்டணி ேபசுகிறோம் என்று சொல்லி அதிமுகவை ஏமாற்றி ₹100 கோடிக்கு மேலாக பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தைலாபுரத்தில் இதற்காக குடோன்கள் கட்டப்படுவதாக செய்திகள் வந்துள்ளது. கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், விரைவில் முடிவு எடுக்க வேண்டும். கடைசியில் அவரை எல்லோரும் கூப்பிடாமல் கைவிட்டு விட்டால் அவர் நிலை அதோகதிதான்.இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை ஆரம்பத்தில் அவரது பேச்சுதான் புரியாமல் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அவரது நடவடிக்கைகளும் புரியாமல் உள்ளது. எங்கு செல்கிறார். எதை நோக்கி செல்கிறார். அரசியலில் எதை சாதிக்க விரும்புகிறார் என்பது எதுவும் புலப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: