அரசு பள்ளியில் வட்டமேஜை போல் தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியைகள் : கல்வியில் புது முயற்சி

தா.பேட்டை: தா.பேட்டை அருகே ஆண்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வியில்  கவனத்தை ஒருமுகப்படுத்திட வட்டமேஜைபோல் தரையில் அமர்ந்து  மாணவர்களுடன் தரையில் அமர்ந்து  ஆசிரியைகள் பாடம் கற்பிக்கும் செயலுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் ஆண்டிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும் , உதவி ஆசிரியர் ஒருவரும் பணி புரிகின்றனர்.

இப்பள்ளி மாணவர்களுக்காக மதியம் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை விஜி மற்றும் உதவி ஆசிரியர் இணைந்து தரையில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து படிக்கும் வகையில் ரூ.15ஆயிரம் செலவில் வட்ட வடிவ டேபிள் தயார் செய்துள்ளனர். இதில் ஒரு டேபிளில் சுமார் 6 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் அருகில் அமர்ந்து நட்புடன் இனிமையாக பேசி பாடம் நடத்துகின்றனர். இது குறித்து தலைமைஆசிரியர் விஜி, உதவி ஆசிரியர் நவமணி ஆகியோர் கூறும்போது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து அவர்களுடன் இணைந்து பாடம் கற்பிப்பதால் குழந்தைகள் பாடத்தை எளிதில் உள் வாங்கி படிக்கின்றனர்.

மேலும் மாணவர் கவனம் சிதறினால் அதை உடன் நாம் கவனிக்க கல்வியில் ஆர்வத்தை தூண்டி கவன குறைவை தடுக்க முடிகிறது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு டேபிள் மீது வைத்து எழுதும் போதும், படிக்கும் போதும் ஆர்வ மிகுதி ஏற்படுவதை அறிந்து வட்ட வடிவில் அமர்ந்து படிக்கும் முறையை கொண்டு வந்தோம். அ, க, ங , வரிசையை தலைகீழாக பார்க்காமல் கூறுவது உள்ளிட்ட பல்வேறு தனி திறமைகளை மாணவர்களுக்கு வளர்த்துள்ளோம் என்று கூறினர். முக்கிய அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் , பெரிய கம்பெனி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்கள் வட்ட வடிவமேஜையில் அமர்ந்து பேசி முடிவு எடுப்பதை பார்த்துள்ளோம் “அந்த வகையில் வருங்கால இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல உள்ள மாணவர்கள் நல்ல பண்புகளுடன் வளர்வது பாராட்டுக்குக்குரியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: