பிரதமரின் வருகையால் தமிழகத்தில் சரித்திர மாற்றம் ஏற்படும் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை; மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6 ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடியின் சென்னை வருகை, தமிழகத்தில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக கூறினார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.  

மார்ச் 6-ல் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என வைகோ கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், மதிமுகவினரின் போராட்டம், வெற்று போராட்டம் என விமர்சித்தார். கமல் எத்தனை பேரை சந்தித்தாலும் , மக்கள் சிந்தித்து தான் வாக்களிப்பார்கள். ஏழை விவசாயிகளை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத எதிர்கட்சியினர் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதை கொச்சை படுத்தினால் இந்திய விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என கூறினார். கூட்டணியில் எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம் தான் பெரிது என்ற அவர், தேமுதிகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: