ஆளுநர் மாளிகை IAS அதிகாரியின் தாயை கவனிக்க 12 மணி நேர ஷிப்ட் : அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தாயாரை கவனித்து கொள்வதற்காக அரசு மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலின் தாய் நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருப்பதாக கூறப்படுகிறது. அவரை கவனிப்பதற்காக மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணிக்கு செல்லும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தாயை கவனிக்க பணிக்கு செல்லும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக  டாக்டர் ரவீந்திரநாத் புகார் தெரிவித்துள்ளார்.

அங்கு பணிக்கு செல்லும் அரசு பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், விதிகளை மீறி சுமார் 12 மணி நேரம் வரை வேலைபளு சுமத்தப்படுவதாகவும் டாக்டர் ரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவர்களை அவமதிக்கும் போக்கு தொடருமானால் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்றார். தேவைப்பட்டால் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபட நேரிடும் என எச்சரித்தார். இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். சுகாதார துறை அமைச்சரும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: