கேரளாவில் சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

சோரனூர்: சென்னையிலிருந்து மங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. கேரளாவின் சோரனூர் பகுதி அருகே வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இன்று அதிகாலை 6.30 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தால் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் இயந்திர பெட்டியின் பின்னால் இருந்த லக்கேஜ்-கம்-பிரேக் பேட்டி மற்றும் பார்சல் பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று ரயில் பாதையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் தாமதாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவனந்தபுரம், மங்களூர், பாலக்காடு ஆகிய பகுதிகளில் ரயில் போக்குவரத்துக்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: