கொடைக்கானல் அருகே புலி தாக்கி குதிரை பலி?

* பொதுமக்கள் பீதி

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே புலி தாக்கி குதிரை பலியான தகவலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலையான புலியூர், டைகர்சோலை, குறிஞ்சிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் தீக்கு பயந்து கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன.

கொடைக்கானல் வில்பட்டியை அடுத்துள்ள புலியூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான குதிரையை அங்குள்ள புல்வெளியில் நேற்று முன்தினம் இரவு மேய விட்டிருந்தனர். நேற்று காலையில் பார்த்தபோது குதிரையை காணவில்லை. சேகர் தேடி சென்ற போது சிறிதுதூரத்தில் குதிரை மர்மவிலங்கு தாக்கி இறந்து கிடந்தது. குதிரையின் கழுத்தில் புலி கடித்து குதறியது போல் ஆழமான காயம் இருந்தது. தகவலறிந்ததும் வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் ஹக்கிம் வரவழைக்கப்பட்டு குதிரையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். புலியின் நடமாட்டம் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: