ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ.க்கு சிபிஐ ‘லுக் அவுட்’ நோட்டீஸ்

புதுடெல்லி: வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி ₹1,875 கோடி கடன் வழங்கியதற்காக 64 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்ஹர் வௌிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, அவரை ‘தேடப்படும் நபர்’ ஆக சிபிஐ அறிவித்துள்ளது. அதற்கான நோட்டீசை நேற்று வெளியிட்டது.வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி ₹1,875 கோடிக்கு 6 கடன்களை ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்ஹர் வழங்கினார். இதற்காக வீடியோகான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வேணுகோபால் தூத்திடம் இருந்து சந்தா கோச்ஹரின் கணவர் தீபக் கோச்ஹருக்கு ரூ.64 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த மோசடியால், தனியார் வங்கியான ஐசிஐசிஐக்கு ரூ.1,730 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி, லஞ்ச விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் கடந்த ஆண்டு மார்ச் - ஏப்ரலில் தீபக் கோச்ஹர் மற்றும் வீடியோகான் எம்.டி. வேணுகோபால் தூத் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் சந்தா கோச்ஹரிடம் விசாரணை நடத்துவதற்காக கடந்த ஜனவரி 22ம் தேதி அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ கொடுத்துள்ளது.

வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் தொகையை வழங்க ரூ.64 கோடியை வீடியோகான் எம்டி தூத்திடம் இருந்து தனது கணவர் தீபக் கோச்ஹர் மூலம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி மற்றும் எம்டியான சந்தீப் பாக்‌ஷி, பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் கே.வி.காமத் உள்பட பல முக்கிய வங்கி நிர்வாகிகளின் பெயர்கள் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

6 கடன்கள்

சிபிஐ தனது எப்ஐஆரில், விதிமுறைகளை மீறியும் மோசடியாகவும் வீடியோகான் நிறுவனங்களுக்கு 6 கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

2009 ஆக.26    ₹300 கோடி

2009 ஜூன் 30    ₹175 கோடி

2010 நவ.17    ₹240 கோடி

2010 நவ.17    ₹110 கோடி

2011 மே 30    ₹300 கோடி

2011 அக்.31    ₹750 கோடி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: