4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி மாற்றம் ரத்து

சென்னை: கடந்த 19ம் தேதி 11 போலீஸ் அதிகாரிகளை மாற்றி உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்தார். அதில், தற்போது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  வேலூர் டிஐஜியாக இருந்த வனிதா, சென்ைன கிழக்கு இணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த பாலகிருஷ்ணன் வேலூர் டிஐஜியாகவும் மாற்றப்பட்டனர். தற்போது, அந்த இரு உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வனிதா வேலூர் டிஐஜியாக தொடருவார் என்று தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த செந்தில்குமாரி, சென்னை கிழக்கு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். செந்தில்குமாரி, உடல்நலக்குறைவால் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.

அவருக்கு தற்போது சட்டம் ஒழுங்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக இருந்த ராஜன், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ராஜன் ஏற்கனவே தான் வகித்து வந்த பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக இருந்த சாம்சன், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டு, அவர் நெல்லை சரக சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து வரும், தமிழக அரசு தற்போது குளறுபடியான உத்தரவுகளை பிறப்பித்து, அதை ரத்து செய்து மாற்றி மாற்றி உத்தரவு போட்டு வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: