கொளத்தூர் தொகுதி அலுவலகம் அருகே கணினி பயிற்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் தொகுதியில், மறைந்த மாணவி அனிதா பெயரில் கணினி பயிற்சி மையத்ைத மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் தொகுதி மக்கள் கணினி பயிற்சி மையம் தொடங்கவேண்டும் என கோரிக்கை  வைத்தனர். இதையடுத்து தொகுதி நிதியில் இருந்து சட்டமன்ற அலுவலகம் அருகில் மறைந்த அரியலூர் மாணவி அனிதா பெயரில் கணினி பயிற்சி மையம்  அமைக்கப்பட்டது. இதை மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர், 80 பேருக்கு பயிற்சிக்கான ஆணை வழங்கினார். இதை தொடர்ந்து இறகு பந்து உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து, வீரர்களுடன் ஸ்டாலின் விளையாடினார். மேலும், 2 மாணவிகளுக்கு லேப்டாப், 8  பேருக்கு தையல் இயந்திரம், 2 மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர ஸ்கூட்டர், 4 பேருக்கு தள்ளுவண்டி, ஒரு பெண்ணுக்கு மாவு அரைக்கும் இயந்திரம்,

 8 பேருக்கு  மீன்பாடி வண்டி, புதிதாக திருமணமான 2 தம்பதிக்கு திருமண நிதியுதவி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம், கல்வி உதவித்தொகை, கண் சிகிச்சை  செய்தவர்களுக்கு இலவச கண்ணாடி மற்றும் புத்தாடைகளை வழங்கினார். இதையடுத்து, ஜிகேஎம் காலனியில் டென்னிஸ் விளையாட்டு திடல், சுடுகாடு  ஊழியர்களுக்கு தங்கும் விடுதி, சீனிவாசா நகரில்  தொகுதி நிதியில் சீரமைக்கப்பட்ட மாநகராட்சி தொடக்கபள்ளி, திருவிக நகர் மதுரைசாமி மடம் தெருவில்  கால்பந்து விளையாட்டு திடல் போன்றவற்றை திறந்து வைத்தார். பின்னர், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று நலத்திட்ட உதவி, மாணவ,  மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணம் வழங்கினார்.நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, வில்லிவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாவட்ட  துணை செயலாளர் தேவஜவகர், பொறியாளர் அணி துணை செயலாளர் நரேந்தர், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் மற்றும் திமுகவினர்  பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: