குடிசை வாழ் இளைஞர்களுக்கான கால்பந்து சிக்கிம், மும்பை சாம்பியன்

மும்பை: குடிசைவாழ் இளைஞர்களுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சிக்கிம் அணியும், பெண்கள் பிரிவில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. நாட்டின் குடிசைப்பகுதியில் வசிக்கும் கால்பந்து வீரர்களின் திறனை வெளிக் கொண்டு வரும் வகையில் சோனி நிறுவனம் தேசிய அளவிலான போட்டிகளை நடத்துகிறது. அதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘எஸ்பிஎன் தேசிய ஒருங்கிணைப்பு கோப்பை’ கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது. இப்போது 3வது ஆண்டுக்கான ேபாட்டி பிப். 13 முதல் பிப்.17ம் தேதி வரை மும்பையில் நடைப்பெற்றது. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ்நாடுல ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், பீகார் உட்பட 48 அணிகள் பங்கேற்றன. மேலும் நேபாளம், வங்காள தேசத்தில் இருந்து தலா 2 அணிகளும் பங்கேற்றன.

குடிசை வாழ் இளைஞர்களுக்கான இந்தப்போட்டி ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் சிக்கிம் அணியும், பெண்கள் பிரிவில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளைஞர்களை கொண்ட இந்திய அணி உருவாக்கப்படும். அந்த அணி வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ள 17வது வீடற்றவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: