கம்பர் வாழ்ந்த இடம் முறையாக பாதுகாக்கப்படுமா?

* தொல்லியல்துறை அலட்சியம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகேயுள்ள கம்பர் வாழ்ந்த இடத்தை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயணம் மூலம் இலக்கிய இலக்கணத்தில் சிகரம் தொட்டு இன்று வரை தமிழ் மொழி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் கவிசக்கரவர்த்தி கம்பர். இவர் பிறந்து வாழ்ந்த வரலாற்று பெட்டகமாக திகழ்வதுதான் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழுந்தூர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை குத்தாலம் செல்லும் சாலை இடையே தெற்கே கோமல் என்ற ஊருக்கு செல்லும் பகுதியில் உள்ள தேரிழந்தூரில்தான் கம்பர்  பிறந்து வாழ்ந்துள்ளார். 10 ஆயிரம் பாடல்கள், நூல்கள், வைணவ பக்தி இலக்கியத்தில் முதன்மையாக திகழும் கம்பராமாயணம், கடையேழு வள்ளல்களில் ஒருவரான தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை போற்றியெழுதியவர்.  ஒரே மகனான அம்பிகாபதியை அரச மகள் காதலால் இழந்தவர்.  

alignment=

இவ்வளவு வரலாற்று செய்திகளுக்குச் சொந்தக்காரரான கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு ஒரு விசித்திர பழக்கம் இருந்துள்ளது, உணவுக்காக ஒருமுறை உபயோகித்த மட்பாண்டத்தை மறுமுறை உபயோகிக்காமல் வாழ்ந்துள்ளார். பல ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த இடம்தான் இன்றைக்குக் கம்பர்மேடாக சாட்சி தருகிறது. கம்பரால் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்பாண்ட துகள்கள் இன்றும் பெரிய அளவில் காணப்படுகிறது. கம்பர் வாழ்ந்த காலம் இன்றுவரை ஆராய்ச்சியில் இருந்தாலும் கிபி.9ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டிற்குள் என்பதில் மாற்றமில்லை என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.

இந்த கம்பர் மேடு பகுதியை  கைப்பற்றிய இந்திய தொல்பொருள்துறை அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தன் வசம் வைத்துள்ளது. கம்பர் வாழ்ந்த இடம், அவர் வணங்கிய காளிகோயில், நீராடிய இடம் ஆகியவை சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு அவ்வூர் மக்களால் விளக்கப்படுகிறது.  ராமாயணம் வடநாட்டு மக்களுக்கு தெரிந்ததைவிட தமிழக மக்களில் நீங்கா இடம் பிடித்த ராமாணயத்தை ரசித்து சுவைத்து எழுதிய பெருமை கம்பரைச்சாரும்.

வால்மீகி ராமாயணத்தை உள்வாங்கி அதை பன்மடங்கு இலக்கணமும் இலக்கிய நயமும் கொண்ட காவியமாக மாற்றிய பெருமை கொண்ட கம்பர் வாழ்ந்த இடம் தற்போது எவ்வித பாதுகாப்புமின்றி கேட்பாரற்று கிடக்கிறது. இந்திய தொல்லியல்துணையினர் இந்த இடத்தை கைப்பற்றியதோடு அவர்களின் பணி முடிந்துவிட்டது. தொல்லியல்துறை கையகப்படுத்திய இடத்தை சுற்றி 100மீட்டரிலிருந்து 200 மீட்டர் பகுதிக்குள் எந்தவித கட்டுமானப்பணிகளும் செய்யக்கூடாது என்று அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.  இன்றைக்கு கம்பர் மேடு கேட்பாரற்று  அனாதையாக கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தொல்லியல் துறையினர் அலட்சியம் காட்டாமல் கம்பர்மேட்டை பாதுகாக்க சுற்றுச் சுவர் எழுப்பி பராமரிக்க வேண்டும். என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றில் பறந்த அரசு அறிவிப்பு

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இச்சின்னம் மேற்படி 1953ம் வருட புராதன சின்னங்கள் மற்றும் புதையுண்ட தொல்பொருள் சட்டத்தின் (1958 எண்.24) கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  இதை யாராவது சேதப்படுத்தியோ, அகற்றியோ, ஊனப்படுத்தியோ, திருத்தியமைத்தோ, ஒழுங்கீனப்படுத்தியோ, அழிவுக்குட்படுத்தியோ, தகாத முறையில் உபயோகப்படுத்தினாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.  இத்தண்டனை மூன்று மாதங்கள் வரை அல்லது அபராதம் ரூ.5ஆயிரம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும் புராதன சின்னங்களின் விதி 32 மற்றும் தொல்பொருள் புரையிடம் அரசு ஆணைப்படி பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் மற்றும் அங்கிருந்து மேலும் 200மீட்டர் அல்லது அருகாமையிலுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதி தோண்டுதல் மற்றும் கட்டிடப் பணிக்கு மட்டும் தடை செய்யப்பட்ட மேலும் கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: