கணிப்புகளை தாண்டி மக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம்

சென்னை : கணிப்புகளை தாண்டி மக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கட்சின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

 பின்னர் பேசிய அவர், பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருப்பதாகவும், அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் கடந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யக் கட்சி வளர்ந்திருப்பதாக தெரிவித்தார். மக்களுடனான தொடர்பை தாம் அதிகப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தன்னை ஆசிர்வதித்து அனுப்பியிருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன், தனியே நிற்போம் என்றால் நான் தனித்து அல்ல; நாம் நிற்போம், மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால் கணிப்புகளை தாண்டி ஆதரவு உள்ளது, மக்கள் என் கையை பிடித்து நாடி பார்த்தில் புத்துயிர் இருப்பதால் நம்பிக்கையுடன் அனுப்பியுள்ளனர், எதிர்காலத்தை பற்றி கனவு காணும் பலரின் நினைவாக என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது, மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் 24ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெளியிடப்படும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும், கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: