தேர்தலில் போட்டியில்லை என டிடிவி சொன்னாலும் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் உதயகுமார் பேட்டி

கோவை: ‘‘டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில்  நிற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என சொன்னாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். கோவை மண்டல அதிமுக அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கோவை காளப்பட்டியில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின், அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணி அறிவிப்பு தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. 

தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த அறிவிப்பு வந்த பின்னர் டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, டி.டி.வி தினகரனிடம் தேர்தலில் நிற்பதற்கே ஆட்கள் இல்லை என்று தகவல் வருகிறது. தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி இந்த கூட்டணி அமைக்கப்பட்டு, 40 தொகுதியும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். பா.ம.க தலைவர் ராமதாஸ் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார், கொள்கை அளவிலே மக்கள் நலன் சார்ந்து  நாணலாக விட்டுக்கொடுத்து இருக்கிறோம் என்று. அதையே நாங்கள் வழிமொழிகிறோம்.இவ்வாறு உதயகுமார் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: