முதல்வர் எடப்பாடி மடியில் கனம் உள்ளது கொடநாடு விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்: டிடிவி.தினகரன் பேட்டி

சேலம்: அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி. தினகரன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்த  தேர்தலுடன் முடியப்போகிற கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து அதிமுக கூட்டணி  அமைத்துள்ளனர். இது அனைவரும் ஒன்று சேர்ந்து கயிற்றை கட்டிக் கொண்டு  கிணற்றுக்குள் குதிப்பதற்கு சமம். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மனோஜ்  முன்ஜாமீனை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதில்  இருந்தே, அவர் மடியில் கனம் உள்ளது ெதளிவாகிறது. அதனால் தான் எடப்பாடி  பழனிசாமி பயப்படுகிறார். உண்மை எல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார். பின்னர்  சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் மக்கள் சந்திப்பு பயணத்தை டிடிவி. தினகரன்  துவக்கி பேசியதாவது: நாடாளுமன்ற  தேர்தல் மே மாதம் வர இருக்கிறது.

மத்திய மாநில அரசுகளால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். தமிழர் வாழ்வு மலர நீங்கள்,  எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழக மக்கள் விரும்பாத கட்சிகளுடன் அதிமுக  கூட்டணி சேர்ந்துள்ளனர். இன்னொரு கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல்  தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்தவர்கள்.  இவர்கள் பெரிய பாறாங்கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில்  குதிக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை அகற்ற உங்களது ஒரே  வாக்குபோதும். தமிழக விரோத கூட்டணிக்கு முடிவு கட்ட ஒரு நல்ல வாய்ப்பு  வந்துள்ளது. எனவே நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பண  மூட்டையுடன் வருபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு  தினகரன் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: