அதிமுகவுடனான பேச்சுவார்த்தை தமாகா மறுப்பு கூட்டணி குறித்து திமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சு?

சென்னை: அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளிவந்த செய்திக்கு தமாகா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜி.கே.வாசன் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று காலை தமாகாவின் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், தனிப்பட்ட விஷயத்துக்காக அமைச்சர் தங்கமணியை அவரது வீட்டில் சந்திக்க சென்றார். இதனால் தமாகா சார்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஜி.கே.வாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விடியல் சேகரை கண்டித்தனர். இதையடுத்து, உடனடியாக தமாகா சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

விடியல் ேசகர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ‘‘அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவந்துள்ள தகவல் உண்மையல்ல. கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது’’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தமாகா மறுப்பு தெரிவித்துள்ளதால், திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான முயற்சியை ஜி.கே.வாசன் எடுத்து வருவதாக தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: