அதிமுக-பாஜக கூட்டணி அமைவதில் இழுபறி?...... அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்தானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருவதாக இருந்த அமித்ஷா திடீரென டெல்லிக்கு சென்றுவிட்டார். ஆனால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் மட்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

Advertising
Advertising

ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மோடி கடந்த வாரம் திருப்பூர் வந்தபோது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது  அறிவிக்கப்படவில்லை. பின்னர் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் கூட்டணி அறிவிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகம் வர இருந்த அமித்ஷா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா தமிழக வருகை ரத்தானதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: