23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வீர மரணம் அடைந்த இந்த வீரர்களில் 23 பேர் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன் வாங்கியிருந்தனர். இவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்துள்ளது. சிஆர்பிஎப் அனைவருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ30 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு உள்ளது. இந்த காப்பீட்டு தொகையை அவர்களது வாரிசுகளுக்கு வழங்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது. நாட்டுக்காக உயிர் நீத்த இந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஈடில்லாத இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடன் தொகை தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வருகிறது என வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: