தெலங்கானாவில் 2,000 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி: 4 லட்சத்துடன் 2 பேர் கைது

திருமலை: தெலங்கானாவில் 2 ஆயிரம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.98 லட்சம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தென்கோட்டா காவல்துறை ஆணையாளர் அஞ்சனி குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து கள்ள நோட்டுக்களை தயார் செய்து எடுத்து வந்து இந்தியாவில் புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3.98 லட்சம் மதிப்புள்ள 2000 கள்ளநோட்டுகள், பைக் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், ஐதராபாத் தலபாக்கட்டு முகமது நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்கிற பாம் கவுஸ்(48), மேற்கு வங்க மாநிலம், மால்தா மாவட்டம், கிருஷ்ணாப்பூர் முன்சிவோ கிராமத்தை சேர்ந்த ரபில்ஷேக்(22) என்பது தெரியவந்தது. முகமது கவுஸ் 2011ம் ஆண்டு முதல் கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டு சிறை    சென்றவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: