விளையாட்டு துளிகள்

* பிக் பாஷ் டி20 லீக் தொடரின் பைனலில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.15க்கு தொடங்குகிறது.

* முஷ்டாக் அலி டிராபி டி20 தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தொடக்க வீரர் பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளார்.
Advertising
Advertising

* இரானி கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்ற 3வது அணி என்ற பெருமை விதர்பாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக மும்பை, கர்நாடகா அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.

* தேசிய பேட்மின்டன் தொடரில் சிந்து - சாய்னா நேற்று மோதிய பைனலின்போது மின்தடை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: