ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே ‘டாப் எகிறியது’

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறை, பயன்பாட்டிற்கு வரும்முன்னே மேற்கூரை காற்றில் பறந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி அருகே நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்களுக்கு ஊராட்சி அலுவலகம் எதிரே மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கழிவறைகள் கட்டப்பட்டன.

alignment=

தரமான முறையில் மேற்கூரை அமைக்காததால் சமீபத்தில் வீசிய கஜா புயலுக்கு மேற்கூரை பறந்து சேதமடைந்தது. 2 மாதத்திற்கு மேலாகியும் மேற்கூரை சரிசெய்யப்படவில்லை. இதனால் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. மேற்கூரையை சரிசெய்து கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: