புழல் சிறையில் ராம்குமார் மர்மச்சாவு: மனித உரிமை ஆணைய எஸ்.பி. நெல்லையில் விசாரணை: தந்தை பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை: சென்னை புழல் சிறையில் ராம்குமார் மர்மச்சாவு தொடர்பாக நெல்லையில் மனித உரிமை ஆணைய புலனாய்வு எஸ்.பி. விசாரணை நடத்தினார். சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, கடந்த 24-6-2016 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் சுவாதியின் வீட்டின் அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்து நெல்லையை சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார் (25) என்பவரை கடந்த 31-6-2016 அன்று போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை புழல் சிறையில் அவர் 18-9-2016 அன்று மர்மமான முறையில் இறந்தார். அவர் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ராம்குமார் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் தமிழ்நாடு மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு எஸ்பி சத்தியபிரியா தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று நெல்லை வந்தனர். அவர்களிடம் ராம்குமாரின் தந்தை பரமசிவன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.  ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறுகையில், சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. எனவே அந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்யவில்லை. அவர், கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: