தாக்குதல் குறித்து காஷ்மீர் புலனாய்வு காவல்துறை முன்னரே தகவலளித்தும் விழிப்புடன் செயல்படாத மத்திய உளவுத்துறை!

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் ஆன்லைனில் எச்சரிக்கை வீடியோ பதிவேற்றம் செய்திருக்கும் அதி்ர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றப் போவது எப்படி என்பது குறித்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் மறைமுகமாக தெரிவித்துள்ளது. ஆப்கானில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு தாலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றும் காட்சியை அந்த இயக்கம் பதிவேற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய உளவுத்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறியதால் தான் புல்வாமா தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோசமான வானிலை காணரமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு 350 கிலோ வெடிமருந்துடன் வேனை பயங்கரவாதிகள் கொண்டு சென்றதை உளவுத்துறை கண்காணிக்க தவறியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடே காரணம்..

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் இத்தனை பெரிய அணிவகுப்பாக வந்திருக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றிருந்தால் தாக்குதல் சாத்தியப்பட்டிருக்காது. ஆனால் சில இடங்களில் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. சரியான சோதனைகள் இருந்திருந்தால் வெடிபொருட்களுடன் ஒரு கார் வந்திருக்கவே முடியாது. உண்மையாகவே இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: