முன்னேறினார் குல்தீப்: கோஹ்லிக்கு பின்னடைவு
துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட தரவரிசையில், பாகிஸ்தான் அணி 135 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா (124), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (118) அடுத்த இடங்களில் உள்ளன.பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த கடைசி டி20 போட்டியி சிறப்பாக செயல்பட்ட இந்திய சுழல் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் அவர் முதல் முறையாக 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.