சாணார்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 52 பேர் காயம்

கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றன. 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சிறந்த வீரர்கள், காளைகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 52 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: