உபி.யில் யானை சிலைகளை அமைத்த செலவு தொகை செலுத்த வேண்டும்: மாயாவதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  ‘யானை சிலைகளை அமைத்ததற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் 685 கோடி செலவில் பிரமாண்டமான வகையில் தலித் நினைவகம் கட்டப்பட்டது. அதில் அம்பேத்கர், கன்சிராம் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுடன் மாயாவதிக்கும் சிலை நிறுவப்பட்டது. இதில், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில் 20 யானை சிலையும் நிறுவப்பட்டது. இந்த நினைவகங்கள் அமைக்கப்பட்டதில் சுமார் 1,400 கோடி வரையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

அதனால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் சின்னமான யானை சிலை அமைத்ததில் பொதுமக்களின் வரிபணத்தை பயன்படுத்தியது உறுதியானால் சட்ட நடவடிக்கைக்கு  அக்கட்சியின் தலைவர் மாயாவதி தயாராக இருக்க வேண்டும். இதில் நீதிமன்றம் கண்டிப்பாக எந்தவித தளர்வையும் தராது. யானை சின்னங்களை அமைக்க செலவான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் ’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  பின்னர், வழக்கை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: