கான்பூரில் 125 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்திரப்பிரதேச அரசு ஆணை

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. நான்கு பேர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவுக்கு ஓய்வுபெற்ற உ.பி. காவல்துறை இயக்குநர் அதுல், தலைவராக இருப்பார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் சந்திர அகர்வால், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் யோகேஷ்வர் கிருஷ்ணா ஸ்ரீவத்சவா ஆகியோருடன் தற்போது பணியில் உள்ள எஸ்.பி., அல்லது எஸ்.எஸ்.பி. நிலையில் உள்ள போலீஸ் அதிகாரியும் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களிடம் இந்த குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 2 சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில் உத்தரிப்பிரதேச மாநிலம் கான்பூரில் 125க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போது சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: