தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி: டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய காங்கிரஸ் தலைவராக  கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 40தொகுதியையும் தோழமை கட்சியோடு சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வெற்றி பெறுவோம். எங்களுக்குள் கோஷ்டி பூசல் கண்டிப்பாக கிடையாது.  கருத்து வேறுபாடுகள் மட்டும் தான் உள்ளது. திருநாவுக்கரசரை பொருத்தமட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவராக சிறப்பாக  பணியாற்றியுள்ளார். அவருக்கு புதிய பதவி விரைவில் வழங்கப்பட உள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் மேலும் பல்வேறு கட்சியிகள் எங்களோடு இணைய  விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் உரிய இடம் தேர்தலின் போது ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தலைவர்  ராகுல்காந்தி இந்த மாதம் தமிழகம் வரவுள்ளார். அதுகுறித்து தேதி அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து விரைவில் வெளியிடப்படும்.   இதைத்தவிர தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் 7ம் தேதி நான் பதவி ஏற்க உள்ளேன். அதற்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட  கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளேன் என அவர் கூறினார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: