தன்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்; நிர்மலா தேவி பரபரப்பு புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக பேராசிரியை நிர்மலா தேவி குற்றம் சாட்டினார். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக தெரிவித்தார். மாணவிகளை பாலியல் பேரத்திற்கு அழைத்ததாக கூறி அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு 220 நாட்கள் ஆன பின்பு முதன் முறையாக அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

16 முறைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். 7 முறை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் அவர் எவ்வித கருத்துகளும் தெரிவித்தது இல்லை. இதே போல் கருப்பசாமி மற்றும் முருகன் இருவரும் தான் இந்த வழக்கு பொய்யானது என்று குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக தெரிவித்தார்.

நிர்மலா தேவி வழக்கறிஞர் பேட்டி

நிர்மலா தேவி வழக்கு பின்னணியில் அமைச்சர்கள் உள்ளதாக பேராசிரியை நிரமலா தேவி வழக்கறிஞர் பசுபதி பாண்டியன் தெரிவித்துள்ளார். நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைப்பதை அமைச்சர்கள் தடுக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: