2018ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருது குளச்சல் முகமது யூசுப்பிற்கு அறிவிப்பு

சென்னை : 2018ம் ஆண்டின் மொழிப் பெயர்ப்பாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை 24 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் திருடன் மணியன் பிள்ளை நூலை தமிழில் மொழிப் பெயர்த்த குளச்சல் முகமது யூசப் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள்

இலக்கியப் படைப்புகளுக்கான உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். சாகித்ய அகாதமி விருதுகளுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் பாராட்டுப் பட்டயமும் அளிக்கப்படுகிறது.

எழுத்தாளர் குளச்சல் யூசப்பிற்கு சாகித்ய அகாடமி விருது

இந்நிலையில் 2018ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்ததற்காக சுபஸ்ரீ கிருஷ்ணசாமிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த மொழிப் பெயர்ப்பு பிரிவில் திருடன் மணியன் பிள்ளை நூல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளது. மணியன் பிள்ளையுடன் ஆத்ம கதா என்ற மலையாள நூலை தமிழில் மொழிப் பெயர்த்த எழுத்தாளர் குளச்சல் யூசப்பிற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், வங்கமொழி, மராத்தி, உருது உள்ளிட்ட 24 மொழிகளில் நூல்களை மொழிப் பெயர்த்த எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: