டிடிவி-க்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கூடாது : இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: டிடிவி தினகரன் தங்களுக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும், மேலும் இந்த வழக்கில் டிடிவி.தினகரன் மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஜனவரி 28ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 24ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் டிடிவி.தினகரன் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”எங்களது தரப்பில் 20 எம்.எல்.ஏக்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும் எங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் எங்களுக்கு குக்கர் சின்னத்தையே மீண்டும் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேப்போல் டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பிலும் எழுத்துப்பூர்வ அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: