பத்ம விருதை ஏற்க எழுத்தாளர் கீதா மேத்தா மறுப்பு

புவனேஷ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின்  சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா மத்திய அரசின் பத்ம விருதை ஏற்க மறுத்துவிட்டார்.குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் பல துறைகளிலும் சிறந்த சேவை புரிந்தோருக்கு மத்திய அரசு  பத்ம விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விச் சேவைக்கான பத்ம விருதுக்கு எழுத்தாளர் கீதா மேத்தா தேர்வு செய்யப்பட்டிருந்தார். எழுத்தாளர் கீதா மேத்தா சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். 14 ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி ஆவார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும்  கீதா மேத்தா பத்ம விருதை ஏற்க மறுத்து விட்டார். ஒடிசா சட்டப்பேரவை தேர்தலும், மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், தான் விருதை பெற்றுக்கொள்வது அரசுக்கும் தனக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.ஒடிசாவில், ஆளும் பீஜூ ஜனதா தளம் பாஜ.வின் கூட்டணிக் கட்சியாகும். ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பாஜ.வுக்கும், பிஜூ ஜனதா தளத்துக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் நவீன் பட்நாயக்கை சமசரப்படுத்தும் வகையில் அவரது சகோதரிக்கு, பத்ம விருதை மத்திய அரசு அறிவித்தது கூறப்பட்டது. இதனால் தற்போது அதை ஏற்க கீதா மேத்தா மறுத்துவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: