அமெரிக்காவில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து

சென்னை: தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். . 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.விஜயகாந்த் அந்த வீடியோவில், “அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். லஞ்சமில்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல். மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நன்றி வணக்கம்” என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்த்தின் வாழ்த்து வீடியோவை அவரது ரசிகர்களும், தேமுதிகவினரும்  சமூகவலைதளங்ளில் பதிவிட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: