தேர்தல் நேரம் என்பதால் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை ஏற்க எழுத்தாளர் கீதா மேத்தா மறுப்பு

புபனேஸ்வர்: ஒடிசா முதல்வரின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா, பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் தனது குடியரசு தின உரையினை நிகழ்த்திய போது இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். அதில் கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விருதை ஏற்க முடியாது என்று கீதா மேத்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூயாரர்க் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவர் என்று இந்திய அரசு என்னை தேர்வு செய்ததற்கு ஆழ்ந்த பெருமிதம் அடைகிறேன். அதேசமயம், இதை நான் ஏற்கக் கூடாது என்று எனது மனது சொல்கிறது. இந்தியாவில் பொதுத்தேர்தல் வர இருப்பதால், இந்த சமயத்தில் இந்த விருது எனக்கு வழங்கப்படுவது சலுகையாக தான் தெரிகிறது. இந்த விருதை தற்போது நான் ஏற்றால், என் மீதும் அரசு மீதும் ஒரு தவறுதலான புரிதலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். எனவே இதை நான் ஏற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கீதா மேத்தா கூறியுள்ளார். இதற்கிடையில், இந்திய குடிமகளான கீதா மேத்தாவுக்கு வெளிநாட்டினருக்கான பிரிவில் பத்மஸ்ரீ விருது ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: