தமிழக அரசுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மனு : சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஆலை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் இடைக்கால மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் ஆலையை திறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசு தரப்பில் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கப்படவில்லை. அதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி செயல்பட தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் நவீன் சின்கா, வழக்கை வரும் 24ம் தேதிக்கு விசாரணை மேற்கொள்வதாக அறிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: