சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

டெல்லி : சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால் வழக்கில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுநல வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ இயக்குனர் தேர்வில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற கோரி பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: