சென்னையில் 21ம் தேதி சக்தி திட்ட துவக்க விழா - திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை: சக்தி திட்டத் துவக்கவிழா வருகிற 21ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி சக்தி என்னும் சிறப்புத் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தில் ஐம்பத்து மூன்று லட்சம் உறுப்பினர்கள் வெற்றிகரமாக இணைந்துள்ளார்கள். இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் சக்தி திட்டம் தற்பொழுது துவங்கப்பட உள்ளது. இத்திட்டம் இந்தியா முழுவதற்கும் முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

எனது தலைமையில் சக்தி திட்டத் துவக்க விழா வரும் 21ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுவார்கள்.தமிழகத்தில் உள்ளவர்கள் சக்தியில் இணைய விரும்பினால், தங்களுடைய கைபேசி வழியாக அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழகத்திற்கான பிரத்யேகமான எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சுலபமாக இணைந்து விடலாம். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படுகிற அவதூறு பிரசாரங்களை முளையிலேயே முறியடிப்பதற்கு சக்தி திட்டம் ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: