கொடநாடு விவகாரம் துரோகத்தின் சின்னம்: கமல்ஹாசன் பேட்டி

பொள்ளாச்சி: கொடநாடு விவகாரம் துரோகத்திற்கு சான்றாக அமைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தை அதன் தலைவர் கமல–்ஹாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக என்னை திரைப்பட கலைஞனாக கொண்டாடிய தமிழக மக்களுக்கு செய்ய வேண்டி கடமைகளை இப்போது செய்து கொண்டிருக்கிறேன். கொடநாடு விவகாரத்தை ஆராய வேண்டியது போலீசாரின் கடமை.  கொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி இருக்கிறது. மக்களுக்கும் அவர்கள் செய்த துரோகத்திற்கு சான்றாக இருக்கிறது.

கட்சி தொண்டர்களை நோக்கி நாங்கள் நகர வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தின் நான்கு திசைகளிலும் எங்களது கட்சி அலுவலகம் திறக்கப்படுகிறது. நீர்நிலை ஆதாரங்களையும், பெண்களின் ஆரோக்கியம், விவசாயிகள்  பிரச்சினை, கல்வி போன்றவை குறித்து வல்லுனர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.  தற்போது அரசு இலவசமாக கொடுக்கும் கல்வியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் ஊழலற்ற, ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். இடஒதுக்கீடு ஏற்படுத்தபட்டதற்கான  காரணம் நீங்கிய பின்னர் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு குறித்து யோசிக்கலாம். இன்னும் இடஒதுக்கீடு கொண்டு வந்ததற்கான காரணம் நீங்கவில்லை.  இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டை கொடுக்காமல், புதிய ஒதுக்கீடு கூடாது. இடஒதுக்கீட்டால் அதிகார்வ பகிர்வு இன்னும் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. . இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: