மாட்டுப் பொங்கலையொட்டி 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, மாடு : ஆம்பூர் நகைத்தொழிலாளி சாதனை

ஆம்பூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியை சேர்ந்தவர் தேவன்(52). இவர் மாட்டுப்பொங்கலையொட்டி 1.9 கிராம் தங்கத்தை பயன்படுத்தி பொங்கல்பானை, 3 கரும்புகள் மற்றும் மாடு ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். 3 சென்டிமீட்டர் உயரமும் நான்கு சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்தபொங்கல் பானையை அவர்,  24 மணிநேரத்தில் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே உலக கோப்பை கால்பந்து, கிரிக்கெட், உலக தமிழ் மாநாடு ஆகியவற்றை ஒட்டியும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டியும்  பல்வேறு உருவங்களை தங்கத்தில் வடிவமைத்துள்ளார்.

இதேபோல் மறைந்த தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது உருவங்கள், திருக்குறள் புத்தகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தற்போது பொங்கலையொட்டி இவர் உருவாக்கியுள்ள இந்த பொங்கல் பானை மற்றும் மாடு ஆகியவற்றைச் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: