புனேவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவியது: இந்திய வானிலை மையம்

புனே: 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையின்படி, 2005 ம் ஆண்டிற்கு பிறகு 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. 2018 ல் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக 167 விபத்துக்கள் நடந்துள்ளன. 2017 டிசம்பரில் 30 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 2005 டிசம்பரில் 177 விபத்துக்கள் நடந்துள்ளன. 2018 டிசம்பர் மாதத்தில் மிக குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. சராசரியாக இதுவரை 11 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவி வந்துள்ளது.

பொதுவாக இரவு நேரங்களில் 6 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும். ஆனால் தற்போது மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது. இந்த குளிர்காலத்தில் கடும் குளிருக்கு மேற்கு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வடஇந்தியாவில் மழையும், குளிரும் அதிகமாக காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் மேலும் 2 நாட்களுக்கு மூடு பனி அதிகரிக்கும் எனவும், மேகக் கூட்டங்களின் குறைவால் பனி அதிகரித்துள்ள காணப்படும் என சென்னை வானிலை மையமும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: