வாட்ஸ் ஆப் பேமன்ட் சேவை - ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: வாட்ஸ் ஆப் பேமன்ட் சேவை தொடர்பான வழக்கில், ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வாட்ஸ் ஆப் நிறுவனம் பண பரிவர்த்தனை (பேமன்ட்) சேவை வழங்குவது தொடர்பாக, தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்தியாவில் பேமன்ட் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் அதற்கான தகவல்களை இந்திய சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும். இந்த விதிகளை பூர்த்தி செய்யும் வரை வாட்ஸ் ஆப் நிறுவனம் பேமன்ட் சேவையை வழங்க அனுமதிக்க கூடாது. அதோடு, இந்த வழக்கில் வாட்ஸ் ஆப்பையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தது.

 இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் வினீத் சரண் அடங்கி பெஞ்ச், ரிசர்வ் வங்கியை பிரதிவாதியாக சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. வாட்ஸ்ஆப் நிறுவன சேவையை இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 லட்சம் பேரிடம் பேமன்ட் சேவையை சோதனை அடிப்படையில் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: