பாகிஸ்தான்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சிறைக்குள் இருதய நிபுணர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது மகள் மரியம் நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அல் அஜீசியா உருக்காலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீஃப் லாகூர் சிறையில் உள்ளார்.