முதியோர்களை குறிவைத்து நகை, பணம் பறிப்பு : சென்னை முழுவதும் கைவரிசை பிரபல கொள்ளையன் சிக்கினான்

சென்னை: முதியவர்களிடம் உதவி ெசய்வது போல் நடித்து, தனியாக அழைத்து ெசன்று நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர் கென்னடி 2வது தெருவை சேர்ந்தவர் வேதராமன் (90). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி லஸ் கார்னர் பிள்ளையார் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வேதராமனிடம் சென்று உதவி செய்வது போல் ேபசியுள்ளார். பின்னர் வேதராமனை வீட்டில் விடுவதாக கூறி தனது பைக்கில் சிறிது தூரம் அழைத்து சென்று ஆட்கள் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தி முதியவரை மிரட்டி அவர் வைத்திருந்த ₹45 ஆயிரம் மற்றும் அரை சவரன் மோதிரத்தை பறித்து கொண்டு மாயமாகிவிட்டார்.

வேதராமன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, கோடம்பாக்கம் காமராஜ் நகரை சேர்ந்த சிவக்குமார் (38) என்று தெரியவந்தது.பின்னர் போலீசார் சிவக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் முதியவர்களை குறி வைத்து தொடர் வழிப்பறி மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக, வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் தனது வழிப்பறி சம்பவங்களை நடத்தி வந்துள்ளார். ஏன் என்றால் மயிலாப்பூர், அசோக்நகர், வடபழனி பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வயதானவர்கள் அன்று அதிகளவில் வருவார்கள்.இதனால் சிவக்குமார் அந்த நாளை தேர்வு செய்து தொடர் கைவரிசை காட்டி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் தனியாக நடந்து சென்ற முதியவர் ஒருவரை வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூதரம் சென்றதும், நான் செல்போன் வாங்க வேண்டும் நீங்களும் உடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த முதியவரும் சிவக்குமாருடன் செல்போன் கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் 4 விலை உயர்ந்த செல்போனை தேர்வு ெசய்து விட்டு ஏடிஎம் கார்டு கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். அந்த ஏடிஎம் கார்டு வேலை செய்யாததால், கடை உரிமையாளரிடம் என்னுடன் வந்தவர் எனது தந்தை தான், வீட்டிற்கு ெசன்று பணத்தை கொண்டு வருகிறேன் என்று கூறி, முதியவரை கடையில் இருக்குமாறு கூறிவிட்டு 4 செல்களை எடுத்து கொண்டு சிவக்குமார் மாயமாகி  உள்ளார்.

இது போல் சென்னை முழுவதும் சிவக்குமார் முதியவர்களிடம் தொடர் கைவரிசை காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இதுபோல் கொள்ளையடிக்கும் பணத்தை ைவத்து சிவக்குமார் மதுரையில் பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கருப்பு சாகுபடி ெசய்து வருவதும், விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவக்குமார் மீது அசோக் நகர் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: