விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜர்

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று ஆஜராகிறார். ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்வது தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசித்திருக்கலாம் என்ற அடிப்படையில்  அவரிடம் விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 18ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம்  எழுதியிருந்தார். தொடர்ந்து, ஜனவரி 8ம் தேதி விஜயபாஸ்கர் ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று அவர் ஆஜராகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: